×

மகிளா சக்திகேந்திரா திட்டத்தின் கீழ் மகளிர்நல அலுவலர், ஒருங்கிணைப்பாளர் பதவி விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர்,ஜன.31: அரியலூரில் மகிளா சக்தி கேந்திரா  திட்டத்தில், அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டில் பணிபுரிய  மகளிர் நல அலுவலர், மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.  35 வயதுக்குட்பட்ட மகளிர், கணினி பயன்பாட்டில்  அனுபவம் இருக்க வேண்டும். அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுய சான்றொப்பமிட்டு, சுய  விலாசமிட்ட அஞ்சல் உறையுடன் பிப்ரவரி 14ம்தேதி  மாலை 4.30 மணிக்குள், நேரடியாகவோ,  தபால் மூலமாகவோ, மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.20, தரைதளம், கலெக்டர் வளாகம் அரியலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க  வேண்டும் என  கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Woman Officer ,
× RELATED தலைமை செயலகத்தை விரட்டி விரட்டி...