×

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையில் மகளிர்நல அலுவலர், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர்,ஜன.31: பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலக  கட்டுப்பாட்டின் கீழ், மகிளா சக்தி கேந்திரா என்ற திட்டத்தின் கீழ் பணிபுரிய  ஒரு மகளிர் நல அலுவலர் மற்றும் 2மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்ய  உள்ளது. கணினியில்  அறிக்கை எழுதும் திறன், கண்காணிப்பு தகவல் அமைப்பு திறன் பெற்றிருக்க  வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35க்குள் இருத்தல் வேண்டும். பெண்களுக்கும்  மாவட்டத்திற்குள் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக் கப்படும். மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு மனிதவளத்துறை, சமூக அறிவியல், சமூக நலப்பணி  மற்றும் இவை தொடர்புடைய துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மாவட்டத்தில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை நன்கு புரிந்து செயலாற் றும்  திறன், கணினியில் பணிபுரியும் அளவிற்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

அதிக பட்ச வயதுவரம்பு 35க்குள் இருத்தல் வேண்டும். பெண்களுக்கும்,  மாவட்ட த்திற்குள் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த  கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெரம்பலூர்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைதளத்தில் இயங்கும் மாவட்ட சமூக  நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பிப்ரவரி 8ம்தேதி   மாலை 5மணிக்குள் அனுப்ப வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Women Welfare Officers ,Coordinators ,
× RELATED நாகுடியில் கல்லணை கால்வாய் பாசன ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்