×

செட்டிபுலம் கிராமத்தில் பழங்கால சிவலிங்கம் கண்டெடுப்பு

வேதாரண்யம், ஜன. 31: வேதாரண்யம் அடுத்த செட்டிபுலத்தில் பழங்கால சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. நாகை  மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செட்டிபுலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது  வீட்டின் அருகே கஜா புயலால் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால்   வேர் பாகங்களை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நேற்று  முன்தினம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 5 அடியில் கருங்கால் ஆன நான்கரை  அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைக்கு பொதுமக்கள் பூஜை  செய்து வழிபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் கரியாப்பட்டினம் போலீசார்  மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு  உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Chettipulam Village ,
× RELATED செட்டிபுலம் கிராமத்தில் பழங்கால சிவலிங்கம் கண்டெடுப்பு