×

மனித நேய வாரவிழா

அருப்புக்கோட்டை, ஜன. 31: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குருந்தமடம் கிராமத்தில், விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மனித நேய வாரவிழா நடைபெற்றது. இதன் மூலம் தீண்டாமை ஒழிப்பு, மனிதநேயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், சமுதாய மோதல் இல்லாமல் இருக்கும் கிராமங்களை அரசு தேர்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு வளர்ச்சிப்பணிகள் செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனடிப்படையில், குருந்தமடம் கிராமம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் முகமது அஸ்லாம் தலைமை வகித்தார். டிஎஸ்பி வெங்கடேசன், தாலுகா இன்ஸ்பெக்டர் அன்னராஜ் முன்னிலை வகித்தனர். சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் வரவேற்றார். தாசில்தார் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகமூர்த்தி, தனி அலுவலர் சுப்பிரமணி, புள்ளியல் ஆய்வாளர் சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு கணேசன், சார்பு ஆய்வாளர்கள் சர்மிளா, பாலசுப்பிரமணி, ராம்குமார், கருப்பையா, முருகேசன், சுந்தரமூர்த்தி மற்றும் சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகர் செய்திருந்தார்.

Tags : festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...