×

மாவட்ட விளையாட்டு போட்டி ராஜராஜன் கல்லூரி சாம்பியன்

காரைக்குடி, ஜன.31: மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் ராஜராஜன் கல்வியியல் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலைச்சாமி துவக்கி வைத்தார். பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ராஜராஜன் கல்வியியல் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் இளையான்குடி டாக்டர் ஷாகீர் உசேன் கல்வியியல் கல்லூரி அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. கலைப்போட்டிகளில் ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல் இடத்தையும், இளையான்குடி ஷாகீர்உசேன் அணி 2ம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


Tags : Rajarajan ,
× RELATED தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு