×

ஏடிஎம் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி

பென்னாகரம், ஜன.31: ஒகேனக்கலுக்கு தினந்தோறும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல் பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. இந்த ஏடிஎம் கடந்த 5 மாதங்களாக செயல்பாடின்றி மூடிய நிலையிலேயே உள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் கிராம மக்கள், தங்களது அவசர தேவைக்காக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் வசதி இல்லாததால், ஒகேனக்கல் பகுதியில் உள்ள கடைகளில் பே ஏடிஎம், கூகுள்பே மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு, ₹1000க்கு ₹100 கமிஷன் தொகையாக பெற்றுக்கொண்டு பணத்தை கொடுக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ஒகேனக்கல்லில் ஏடிஎம் வசதி ஏற்படுத்த ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Travelers ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை