×

ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாககுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

நாகர்கோவில், ஜன.31:  ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 21 மாத நிலுவை ஊதிய தொகையை வழங்கிட வேண்டும். செவிலிய தொகுப்பூதியத்தை ரத்து செய்ய வேண்டும். ெதாகுப்பூதியத்தை பணிக்காலத்துடன் சேர்க்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துமனை  களில் நேற்று நர்சுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமரி மாவட்டத்தில் அரசு நர்சுகள் சங்கம் சார்பில், நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டம் நடந்தது. அதன்படி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிக்கு வந்த நர்சுகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். மாநில இணை செயலாளர் ஜீவா ஸ்டாலின், மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் நிர்மலா மற்றும் அலெக்ஸ் மேரி, செலஸ்டி, தமிழ் செல்வி, எபனேசர் டேவிட், விஜயன் உள்பட 150க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் நிர்வாகிகள் கூறினர்.

Tags : junior state ,
× RELATED மீனவரை தாக்க முயன்றவர்கள் மீது...