×

திருவள்ளூர் எடப்பாளையத்தில் தனியார் நிலத்தில் இயங்கிய நகராட்சி ஆழ்துளை கிணறு அகற்றம்

திருவள்ளூர், ஜன. 31: திருவள்ளூர் நகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட எடப்பாளையம் பகுதியில் தனியார் நிலத்தில் இயங்கிய நகராட்சி ஆழ்துளை கிணறை, கோர்ட் உத்தரவுப்படி 300க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட் ஊழியர்கள் அகற்றினர்.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு எடப்பாளையம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  அங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றி, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆழ்துளை கிணறு அமைந்துள்ள நிலம் தனி நபருக்கு சொந்தமானது என்ற பிரச்னை எழுந்தது. இது தொடர்பான வழக்கில் தனிநபருக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பு அளித்தது.

அந்த உத்தரவுப்படி, ஆழ்துளை கிணறு மற்றும் பம்ப் அறையை அகற்ற  கடந்த 4 மாதங்களுக்கு முன் கோர்ட் ஊழியர்கள் வந்தனர். போலீஸ் பாதுகாப்புடன், ஆழ்துளை கிணறை அகற்ற ஊழியர்கள் முற்பட்டனர். இந்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நீராதாரமாக விளக்கும் ஆழ்துளை கிணறை அகற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஆழ்துளை கிணற்றை அகற்றவந்த கோர்ட் ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், சம்பவ இடத்துக்கு கோர்ட் ஊழியர்கள் வந்தனர். அந்த ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை தொட்டியையும், பம்ப் அறையையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால், அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : municipality ,Thiruvallur ,land ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை