×

தென்காசி, சிவகிரியில் காந்தி நினைவு தினம்

தென்காசி, ஜன. 31: தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரசார், காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தலைமை வகித்த மாவட்டத் தலைவர் பழனி நாடார் மாலை அணிவித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சீவநல்லூர் சட்டநாதன், ஜேம்ஸ் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் காதர்மைதீன் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், காஜாமைதீன், வட்டாரத் தலைவர்கள் குற்றாலம் பெருமாள், காங்கிரஸ் பொன்பாண்டியன், தெய்வேந்திரகுமார், அகிலாண்டம், சுப்பிரமணியன், மகளிரணி நாகம்மாள், முத்துப்பாண்டி, பால்துரை, அல்போன்ஸ், நாகூர்டெய்லர், வைகைகுமார், செல்லத்துரை, தேவராஜன், பண்டாரசிவன், உதயா, வர்த்தக காங்கிரஸ் சகாயம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சிவகிரி: சிவகிரியில் அமமுக சார்பில் நடந்த காந்தி நினைவு தின நிகழ்ச்சியில் அவரது படத்திற்கு வக்கீல் பிரிவு மாவட்ட  துணைச் செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர். இதில் நகரச் செயலாளர்  கோபாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் ஆனந்தன், ஜெ பேரவை ஒன்றியச் செயலாளர்  மருதுபாண்டியன், அண்ணா தொழிற்சங்க ஒன்றியச் செயலாளர் மணியன், இளைஞர் அணி நகரச்  செயலாளர் செல்வக்கண்ணன், மாணவர் அணி ஒன்றியத் துணைத்தலைவர் நாகராஜ், ஒன்றிய  இலக்கிய அணித்தலைவர் மகாலிங்கம், வக்கீல் அணி நிர்வாகிகள் வெங்கடேசன்,  துரைராஜ், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் வேல்முருகன், அருணகிரி மற்றும்  குமார், முத்துப்பாணடியன், ராஜூ, காதர்பாட்சா, குருவு, சுரேஷ் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

 இதே போல் வாசுதேவநல்லூர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வாசுதேவநல்லூரில் மகாத்மா காந்தி சேவா சங்கம் நடத்தும் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு சங்கத் தலைவர் தவமணி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொன்மணி, குருசாமி பாண்டியன், ஆனந்தராஜ், சேவா சங்கப் பணியாளர்கள் முத்துலட்சுமி, மாலதி மற்றும் சிறப்புப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Tags : Gandhi Memorial Day ,Sankari ,Tenkasi ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...