×

பணி நீக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக தூத்துக்குடி பிஷப் இல்லத்தை மக்கள் முற்றுகை

தூத்துக்குடி, ஜன. 31: தூத்துக்குடி அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக பொதுமக்கள், பிஷப் இல்லத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தூத்துக்குடி அருகே உள்ள வேம்பாரில் ஆர்சி டயோசீசன் பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றி வந்த ஆசிரியர் ரவீந்திரராஜன் என்பவர் கடந்த 5ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.  இதனை கண்டித்து கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட பிஷப் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை உடனடியாக மீண்டும் பணியமர்த்தக் கோரி பிஷப் இல்லத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேற்று மீண்டும் அப்பகுதி மக்கள் பிஷப் இல்லத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த உள்ளிருப்பு போராட்டம் மாலை வரையில் நீடித்தது.


Tags : siege ,home ,Tuticorin Bishop ,teacher ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு