கழுகுமலையில் ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?

கழுகுமலை, ஜன. 31: கழுகுமலை வார்டு எண் 14, ஆறுமுகநகர் பூங்கா அருகில் உள்ள தெருவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் மின் கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. அதன் அடிப்பாகத்தில் அரிப்பு ஏற்பட்டு உள்புறமுள்ள கம்பிகள் தெரிகின்றன. இது எந்த நேரத்தில் கீழே விழும் ஆபத்தான நிலை உள்ளது. இந்த மின் கம்பம் அருகே வரும்போது மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர் மேலும் அருகே மிளகாய் சித்தர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் அவ்வழியாக அச்சத்துடனே செல்கின்றனர். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் ஆபத்தான மின்கம்பத்தை துரிதமாக மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன் வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

Tags : Dangerous Digestion Change ,
× RELATED நில ஆக்கிரமிப்பு அகற்றி மயானம் அமைக்க...