அமமுகவில் இணையும் விழா

காரியாபட்டி, ஜன. 30: காரியாபட்டி மேற்கு ஒன்றியத்தில் உள்ள கல்குறிச்சியில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அமமுகவில் இணையும் விழா நடந்தது. மேற்கு ஒன்றிய அமமுக செயலாளர் தோப்பூர் கருப்பு ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வெயில்கண்ணன் வரவேற்றார். புளியம்பட்டி, நந்திக்குண்டு, பந்தனேந்தல் மல்லாங்கிணறு, ஜோகில்பட்டி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்களது கட்சிகளிலிருந்து விலகி முன்னாள் எம்எல்ஏ, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் சிவசாமி முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து சிவசாமி வரவேற்று பேசினார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயா பிச்சை, திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் பழனி, காரியாபட்டி நகர செயலாளர் சந்துரு ராமசந்திரன், காரேந்தல் கல்கண்டு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர்பிரிவு செயலாளர் கார்த்திகாதேவி கண்ணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பந்தனேந்தல் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராம்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கே.கே.ராஜன், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய பொருளாளர் அபிஷேக், திருச்சுழி நகரச் செயலாளர் கணேசன், ஆலடிபட்டி ராமர் மல்லாங்கிணறு நகரச் செயலாளர் துரைப்பாண்டி, கல்குறிச்சி ஊராட்சி செயலாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED பால்குட திருவிழா