×

‘குடிமகன்களின்’ கூடாரமாக மாறிய கம்பம் பஸ் ஸ்டாண்ட் பயணிகள் கடும் அவதி

கம்பம், ஜன. 30: கம்பம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் இருக்கைகளை முழுவதும் ஆக்கிரமித்து குடிமகன்கள் கும்மாளமிடுகின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.தேனி மாவட்டத்தில் முதல்நிலை நகராட்சியான கம்பத்தில் கடந்த 2004ல் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து கம்பத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் கம்பம் பஸ்டாண்டு எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால் இங்குள்ள பயணிகள் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் ‘குடிமகன்கள்’, அவற்றில் படுத்து ஓய்வெடுக்கின்றனர். இதனால் பஸ்சுக்காக, பயணிகள் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் அவ்வபோது ‘குடிமகன்கள்’ மதுபோதையில் தகராறு செய்வதால் பயணிகள் அச்சமடைகின்றனர். பணியிலிருக்கும் போலீசார் அவர்களை கண்டும், காணாமல் உள்ளனர். எனவே பயணிகள் நலன் கருதி பஸ் ஸ்டாண்டில் கும்மாளமிடும் ‘குடிமகன்களை’ அப்புறப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : passengers ,Cumbum ,
× RELATED சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து,...