×

அணையில் நீர் குறைவால் மீன் திருட்டு அதிகரிப்பு

உத்தமபாளையம், ஜன.30: சண்முகாநதி அணையில் நீர்மட்டம் குறைவினால் மீன் திருட்டு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.ராயப்பன்பட்டி அருகே சண்முகாநதி அணை உள்ளது. 52.5 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு ஹைவேவிஸ் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்யக்கூடிய மழையினால் நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் உயரும்போதெல்லாம் சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, கன்னிசேர்வைபட்டி, ஆனைமலையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயநிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதுண்டு. இதனால் குளங்கள், கண்மாய்களின் நீர்மட்டம் உயரும். பலஆயிரம் ஏக்கர் பயன்பெறக்கூடிய விவசாய நிலங்களின் தோட்டக்கிணறுகளில் தண்ணீர் ஊற்று ஏற்பட்டு காய்கறி, தென்னை, வாழை விவசாயங்கள் செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாகும்.இந்நிலையில்  போதிய மழை இல்லாததால்  சண்முகாநதி அணை நீர்மட்டம் சரசரவென குறைந்து தற்போது 26.25 அடியாகி குளம்போல் காட்சியளிக்கிறது. இதில் அதிகளவில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. மீன்களை ஏலம் விடும் மீன்வளத்துறை அதிகாரிகள் இங்கு வருவதே இல்லை. இதனால் மீன்களை இரவு முதல் பகல் வரை அதிகளவில் பிடிப்பது அதிகரித்து வருகிறது. மீன்களை திருட்டுதனமாக பிடிப்பதற்கென்றே கும்பல்கள் உள்ளன. இவர்கள் மீன்வள அதிகாரிகளை ஏமாற்றுகின்றனர். அதிகாரிகளும் சண்முகாநதி அணையின் பக்கமே வராமல் இருப்பது இவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதால் மீன் திருட்டை எந்தவிதமான தடையும் இல்லாமல் செய்கின்றனர்.

Tags : dam ,
× RELATED வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது