×

காரைக்குடி அருகே விநோதம் - ஆண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

காரைக்குடி, ஜன. 30: காரைக்குடி அருகே தேவபட்டு கோவில் விழாவில் ஆண்கள் மட்டும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
காரைக்குடி கல்லல் அருகே தேவபட்டு அந்தர நாச்சியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா கொண்டப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஊர்மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து விட்டு மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. ஊர் சவுக்கையில் கிராமமக்கள் கூடினர். பின்னர் கிராமத்து சார்பில் 7 பானைகளை ஆண்கள் மஞ்சுவிரட்டு தொழு வரை தலையில் வைத்து சுமந்து சென்றனர்.
தொழு முன்பு மண்பானைகளில் பரங்கி காய் போட்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். பின்னர் இரவு பொங்கலை ஊருக்கு எடுத்துச் சென்று ஆண்கள் மட்டுமே சாப்பிட்டனர். இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடக்கவில்லை.





Tags : Karaikudi - Worship ,men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்