பொதுமக்கள் வேண்டுகோள் அரசு பள்ளியில் மரம் நடும் விழா

சாயல்குடி, ஜன. 30: சாயல்குடி அரசு தொடக்கப் பள்ளியில் மரம் நடும் விழா நேற்று நடந்தது.சாயல்குடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் கீதா ரமணி தலைமை தாங்கினார்.
மாணவர்கள் சார்பில் பள்ளியில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை, பள்ளி வளாகம், பள்ளி முன்பு செல்லும் சாலையோரம், அருகிலுள்ள கோயில் வளாகங்களில் நடப்பட்டு, வேலி அமைக்கப்பட்டது. பிறகு பள்ளியில் மரம் நடுதல் பயன், மரத்தின் நன்மைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.


× RELATED விளையாட்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்