×

கால்பந்து போட்டியில் எஸ்எம்பிஎம் அணி வெற்றி

திண்டுக்கல், ஜன.30:  திண்டுக்கல்லில் நடந்த 4ம் டிவிஷன் கால்பந்து போட்டியில் எஸ்.எம்.பி.எம். அணி வெற்றி பெற்றது.திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 4ம் டிவிஷன் கால்பந்து போட்டி நடந்தது. பார்வதி கால்பந்து அணிக்கும், எஸ்.எம்.பி.எம். கால்பந்து அணிக்கும் நடந்த போட்டியில், பார்வதி கால்பந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து கரிசல் கால்பந்து அணிக்கும் பத்மாவதி பெருமாள் நினைவு கால்பந்து அணிக்கும் நடந்த போட்டியில், கரிசல் கால்பந்து அணி வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் கொட்டப்பட்டி கால்பந்து அணிக்கும், செவன் ஸ்டார் கால்பந்து அணிக்கும் நடந்த போட்டியில், கொட்டபட்டி கால்பந்து அணி வெற்றி பெற்றது. எஸ்.எம்.பி.எம். கால்பந்து அணிக்கும், கே.பி.எஸ். கால்பந்து அணிக்கும் நடந்த போட்டியில், எஸ்.எம்.பி.எம். கால்பந்து அணி வெற்றி பெற்றது.2ம் டிவிசனில் ஸ்டார் கால்பந்து அணிக்கும், ஆர்.வி.எஸ். கால்பந்து அணிக்கும் போட்டி நடந்தது. இதில் ஸ்டார் கால்பந்து அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து ஸ்டார் கால்பந்து அணிக்கும், ரமேஷ் முருகன் நினைவு கால்பந்து அணிக்கும் நடந்த போட்டியில், ஸ்டார் கால்பந்து அணி வெற்றி பெற்றது.மூன்றாம் டிவிசனில், எஸ்.எம்.பி.எம். கால்பந்து அணிக்கும், எடுகேர் கால்பந்து அணிக்கும் நடந்த போட்டியில், எஸ்.எம்.பி.எம். கால்பந்து அணி வெற்றி பெற்றது. இத்தகவலை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்


Tags : SBM ,football match ,
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து போட்டி செப்.21ம் தேதி கொச்சியில் தொடக்கம்