×

மீன் பிடித்த மாணவன் சாவு

பழநி, ஜன.30: பழநி அருகே கணக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சிலம்பரசன் (12). அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக அருகில் உள்ள பட்டிகுளத்திற்கு சென்றார். அங்கு சகதியில் சிக்கி சிலம்பரசன் மூழ்கி விட்டார். இதுகுறித்து தீயணைப்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் சிலம்பரசனின் உடலை மீட்டனர். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போராட்டத்தால் ஆசிரியர்கள் வரவில்லை

Tags :
× RELATED வஞ்சிரம் மீன் குழம்பு