×

இறுதி ஊர்வலத்தின்போது கடைகளை அடித்து நொறுக்கியதை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

மயிலாடுதுறை, ஜன. 30: மயிலாடுதுறை அடுத்த கண்டியூர் பகுதியில் யாராவது இறந்துவிட்டால் அவரது உடலை சுமந்து கொண்டு அஞ்சாறு வாய்த்தலை கடைவீதி வழியாக சென்று ஆற்றங்கரை சுடுகாடு அல்லது இடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் கண்டியூரை சேர்ந்த அறிவழகன் மகன் ஆசைத்தம்பி (21) என்பவர் குத்தாலத்தில் பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்ததில் நடந்த விபத்தில் பலியானார். அவரது உடலை அடக்கம் செய்தவற்காக நேற்று முன்தினம் இரவு கண்டியூரில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அபபோது திறந்திருந்த வணிக நிறுவனங்கள், கடைகளை மூடுமாறு கூறி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் அடித்து நொறுக்கினர் இதுகுறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் வணிகர் சங்கத்தினர் புகார் செய்தனர்.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று வணிகர் சங்கம் சார்பில் தங்களது கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை காலவரையின்றி கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags : shops ,funeral procession ,
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...