×

கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்திற்கு புதிய மடாதிபதி நியமனம்

கும்பகோணம், ஜன.30: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமககுளம் அருகே வீரசைவ பெரிய மடம் தலைமையிடமாக கொண்டு கர்நாடகா, திருவாரூர், தாராசுரம், இலங்கை உள்ளிட்ட பல இடங்களில்  கிளைகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த மடம் சிங்காதன லிங்காயத் சமூகத்தை  சோ்ந்ததாகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆதிசங்கரா் இந்த மடத்தில் உள்ள குருவை வணங்கி சந்திரமவுலீஸ்வர் லிங்கத்தை பெற்ற சிறப்பு மிக்க மடமாகும். மிகவும் சிறப்பு பெற்ற இம்மடத்தில் 97 வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் பொறுப்பு வகித்து வந்தார். அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் யாரிடமும் சொல்லாமல், தலைமறைவாகி விட்டதால் மடத்தின் உறுப்பினர்கள் 20  பேர் நிர்வாக குழு சிறப்பு கூட்டம் நடத்தினர். இதில் பெங்களூர், ஹூப்ளியில் உள்ள சித்திரதுர்கா மடத்திலிருந்த ஸ்ரீ பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளை, கும்பகோணம் வீரசைவ மடத்திற்கு மடாதிபதிகளை நியமனம் செய்வதாக முடிவு செய்தனர். இதனை முன்னிட்டு நேற்று காலை மடத்தில் மடாதிபதியாக நியமனம் விழா நடைபெற்றது.இதில் சித்திரதுர்கா மடத்தின் ஸ்ரீ சிவமூர்த்தி முருக சாராணாரூ பீடாதிபதி ஸ்ரீ முருக ராஜேந்திர பெரியமடாதிபதி, கும்பகோணம் வீரசைவ மடத்திற்கு ஸ்ரீபசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளை மடாதிபதிகளாக நியமித்து  பட்டாபிஷேகம் செய்து செய்து வைத்தார். இதில் மடத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோ் கலந்து கொண்டனர்.

Tags : bishop ,Kumbakonam Veeraiyawai ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது