×

ராஜகிரியில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும்

பாபநாசம், ஜன.30:  ராஜகிரியில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை விடுத்தனர். பாபநாசம் அடுத்த ராஜகிரியில் தி.மு.கழகம் சார்பில் ஊராட்சிச் சபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரை செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, மாவட்ட பொருளாளர் ஷேக்தாவூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி செயலர் பாட்ஷா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் பங்பேற்றார். இதில் பாபநாசம் ஒன்றிய அவைத் தலைவர் யூசுப் அலி, காசிமியா ஜமாலிய சமூக மேம்பாட்டு அமைப்பு முபாரக், சிக்கந்தர், சிறுபான்மைப் பிரிவு ராயல் அலி, ஆவின் ராஜா, வர்த்தக அணி செல்வமுத்துக் குமரன், இளைஞணி துரை முருகன், செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் குறைகள் குறித்து பேசியதாவது: ராஜகிரி சிறுபான்மை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊராட்சியாகும். இங்கு கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் மாணவ சமுதாயம் கெட்டு சீரழிந்து வருகிறது.
காவல் துறையில் கூறினாலும் அவர்கள் எங்களைத்தான் பயமுறுத்துகின்றனர் கூறினர்.

இதேபோல கோபுராஜபுரத்தில் நடந்த திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில் ரவி வரவேற்றார். ரெகுநாதபுரத்தில் நடைப் பெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஊராட்சிச் செயலர் குணசேகரன் வரவேற்றார். மணிமாறன், ரமணி உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பள்ளி மாணவி, இந்த ஊரில் பஸ் நிற்காத காணத்தால் பஸ்பாஸ் கொடுத்தும் எந்த பயனுமில்லை என்றார். சரபோஜிராஜபுரத்தில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் அன்சாரி வரவேற்றார். இதில் பேசிய மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் சைக்கிள் மட்டுமே வைத்திருந்த வேளாண் துறை அமைச்சரை நீங்கள் லிப்ட் செய்து விட்டீர்கள். இன்று அவர் லிப்ட் வைத்து வீடு கட்டுகிறார். லஞ்ச பணத்தை எண்ண 4 மெஷின் வைத்துள்ளார் என்றார். இதேபோல மேலவழுத்தூரில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் துறை அமைச்சரின் சொத்தை பிடுங்க வேண்டும் என்றனர். திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் வலியுறுத்தல்

Tags : Rajagiri ,
× RELATED பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்