×

தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி தஞ்சையில் வீடு வீடாக ஆய்வு பணி

தஞ்சை, ஜன.30: மகாத்மா காந்திஜியின் நினைவு நாளான இன்று (30ம் தேதி) நாடுமுழுவதும் தொழுநோய் ஓழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரோ என்ற கிருமியால் உண்டாகிறது. தோலில் காணப்படும் வெளிர்ந்த அல்லது சிவந்த உணர்ச்சியற்ற தேமல், கை அல்லது கால்களில் மதமதப்பு, முகம் மற்றும் காதுகளில் சிறுசிறு தடிப்புகள் அல்லது கட்டிகள், கை, கால்களில் உணர்ச்சியற்ற நிலை அல்லது புண்கள் ஆகியவை தொழுநோயின் அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உருவாகும் தொழுநோய் ஒழிக்கும் பணியை துணை இயக்குநர் தொழுநோய் சார்பில் ஒழிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30ம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இது தொடர்ந்து பிப்ரவரி மாதம் 14ம் தேதி வரை அதாவது 2 வார காலத்திற்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்துவது, உறுதிமொழிகள் ஏற்பது, சிறப்பு முகாம்கள் நடத்துவது, வீடு, வீடாக சென்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்வது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்று தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கப்படும்.

Tags : House Vacation Inspection Workshop ,
× RELATED பேரூராட்சி இயக்குனர் ஆய்வு