×

உத்திரமேரூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

உத்திரமேரூர், ஜன.30: மருத்துவன்பாடி கிராமத்தில், ₹10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வந்தது. மேலும் மற்ற நாட்களில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்தனர்.இதனால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள், க.சுந்தர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், தனது தொகுதி மேம்பாட்டு நிதி ₹10 லட்சம் ஒதுக்கீடு செய்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எம்எல்ஏ உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் வெங்கடேசன், ஊராட்சி நிர்வாகிகள் சந்திரன், ரஜினி, நந்தகுமார், தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், விவசாய அணி அமைப்பாளர்கள் ஏழுமலை, சுப்பையா, இலக்கிய அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், பொறியாளர் அணி சசிகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Drinking water treatment plant ,Uttirameroor ,
× RELATED கமுதி அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு