×

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சாலை மறியல் போராட்டம் 457 பேர் கைது

புதுக்கோட்டை, ஜன.30: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் 457 பேர் கைது செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களு க்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளி ட்ட 9அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 8வது நாளாக தொடர்ந்து நடை பெற்றது. புக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.  ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பொது அலுவலக வளாகத்தில் ஒன்று கூடினார்கள். அப்போது அவர்களின் கோரிக்கையை  வலியுறுத்தி பேசினர்.

பின்னர் சாலை மறியல் செய்ய வந்த ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அனை வரையும் கைது செய்கிறோம். வேனில் ஏறுங்கள் என்று தெரி வித்தனர். இதனையடுத்து 50 ஆண்கள் உட்பட 457 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்ப ஏற்பட்டது. அரசு பஸ் சிறைபிடிப்பு: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று சாலை மறியலில் ஈடுபடுவதற்காக பொது அலுவலக  வளா கத்தில் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்  சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்து, ஒரு  அரசு பஸ்சில் ஏற்றி மண்டபத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அங்கு  திரண்டு நின்ற அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசு பஸ்சை  சிறைபிடித்து, போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார் கள். இதையடுத்து  போலீசார் அரசு பஸ்சை மாற்று பாதையில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

77 பேரில் 15 பேருக்கு ஜாமீன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22ந் தேதி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஜாக்டோ ஜியோ சார்பில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 566 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மணிகண்டன், செல்வராஜ், கண்ணன், குமரேசன், தியாகராஜன், சக்திவேல் உள்பட 77 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் முன்பு ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து நீதிபதி நாகராஜன் 77 பேரையும் வருகிற 12ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட 77பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 14ஆசிரியர்கள் உள்பட 15 பேர் நேற்று ஜாமீனில் வெளிவந்து உள்ளனர்.

160 பேருக்கு எச்சரிக்கை
புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கெண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் உள்ள 112உயர்நிலைப்பள்ளிகளும், 106மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று 78 சதவீதம் பணி க்கு திரும்பியுள்ளனர். மேலும் 294 நடுநிலைப்பள்ளிகளில் 15சதவீதம் முதல் 20 சதவீதம் ஆசிரியர்களும், ஆயிரத்து 554தொடக்கப்பள்ளிகளில் 20சதவீதம் ஆசிரியர் களும் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லுாரி, கல்லுாரிகளில் இருந்து 2ஆயிரம் மாணவர்கள் தற்போது வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையில் பணிக்கு வராத 160பேருக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கியிருந்தோம். அவர்கள் அனைவரும் பணிக்கு திரும்பி விட்டனர் என்றார்.

Tags : road strike ,Zakat Geo Confederate ,
× RELATED தரமற்று போடப்பட்டதால் பொதுமக்கள்...