×

கெங்கவல்லி அருகே 10 வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

கெங்கவல்லி, ஜன.29: கெங்கவல்லி அருகே மாணவி திருமணத்தை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க உள்ளதாக சேலம் டான்பாஸ்கோ அன்பு இல்லம் அலுவலர்களுக்கு புகார் வந்தது. இதன்பேரில், கெங்கவல்லி கிராம நிர்வாக அலுவலர் அசோக், பெரியதுரை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தனர். இதில், ஆணையாம்பட்டியைச் சேர்ந்த 20 வயது டிரைவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. நாளை(30ம் தேதி) திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் பெற்றோர் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இளம்வயது சட்டப்படி குற்றம் என தெரிவித்தனர். அதனையும் மீறி திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, திருமணத்தை நிறுத்துவதாக பெற்றோர் உறுதி கூறினர். இருவரும் உரிய வயதினை எட்டியதும் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் எழுது வாங்கிக்கொண்டு திரும்பினர். சிறுமி திருமணத்தை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kangavalli ,
× RELATED கெங்கவல்லி அருகே விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சரண்