குடிநீர் கோரி தொப்பம்பட்டி யூனியன் முற்றுகை

பழநி, ஜன. 29: குடிநீர் கோரி ெதாப்பம்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ழநி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது தேவத்தூர் தமிழ்நகர். இங்கு சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லை. போர்வெல்லில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கால்நடையாய் அலைந்து திரிந்தும், விலைக்கு வாங்கியும் தண்ணீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதுகுறித்து அப்பகுதியினர் யூனியன் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று தொப்பம்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாளில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகே மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories:

>