×

முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் அருகே 6 மாதமாக வீணாகிய குடிநீர் குழாய் சீரமைப்பு

முத்துப்பேட்டை, ஜன.29: முத்துப்பேட்டை  ரயில்நிலையம் எதிரே வீணாகிய குடிநீர்குழாய் சீரமைக்கப்பட்டது. திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை ரயில் நிலையம் எதிரே பழைய மின்சார நிலையம் தெருவிலிருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் குடிநீர்குழாயில் பூமிக்கடியில் ஆங்காங்கே சிறியளவிலான உடைப்புகள் உள்ளதால் மாதக்கணக்கில் குடிநீர் வெளியேறி வீணாகி வந்தது. இதில் அப்பகுதியில் உள்ள பொது குடிநீர்குழாய் அருகே  உடைப்பு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டது. இதில் தினந்தோறும் வெளியேறும் குடிநீர் அப்பகுதி முழுவதும் கழிவு நீர்குட்டை போன்று   தேங்கி அசுத்தமாக காட்சியளித்தது. இதனை   சரி செய்யவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்  இது குறித்து நேற்று முன்தினம் (26ந்தேதி) தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக களமிறங்கி பணியாளர்களை கொண்டு சரி செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட  தினகரனுக்கு நன்றி  தெரிவித்தனர்.

Tags : drinking water pipe ,Muttappettu ,railway station ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!