×

திருக்காரவாசலில் விவசாயிகள் சங்கத்தினர் 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

திருவாரூர், ஜன. 29: திருக்காரவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை ரத்து செய்ய கோரி நேற்றும் 2வது நாளாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் விடியவிடிய ஈடுப்பட்டனர். திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் குடியரசு தினமான கடந்த 26ம் தேதி இந்த ஊராட்சிக்குட்பட்ட கோமல் கடை தெருவில்  பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்  இந்த திட்டத்தினை கைவிடும் வரையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அதன்படி தினந்தோறும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் இந்த போராட்டமானது தொடர்ந்து நடைபெறும் என்றும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் இந்த போராட்டமானது திருக்காரவாசலில் துவங்கி விடியவிடிய நடைபெற்ற நிலையில் நேற்றும் 2வது நாளாக இந்த போராட்டமானது மாலையில் துவங்கி விடியவிடிய நடைபெற்றது.
போராட்ட குழு செயலாளர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன், பொருளாளர் தர் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன்அன்சாரி, விவசாய அணி மாநில செயலாளர் முபாரக் மற்றும் போராட்ட குழுவை சேர்ந்த  தலைவர் தியாகராஜன், பொறுப்பாளர்கள் வெங்கடாசலம், சரவணன், ஆனந்தன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.



Tags : Farmers Union ,waiter strike ,
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி...