×

தஞ்சையில் மறியல் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோவினர் 1,800 பேர் கைது

தஞ்சை, ஜன. 29: தஞ்சை மாவட்டத்தில் 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது. தஞ்சையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோவினர் 1,800 பேர் கைது செய்யப்பட்டனர்.3,500  தொடக்கப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை ரத்து செய்ய  வேண்டும். 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும்.  அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மத்திய அரசின்  முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி  ஆசிரியர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் ஆகிய 9 அம்ச கோரிக்கையை  வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த 22ம் தேதி முதல்  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதன்படி  நேற்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கரன், முருகன்  ஆகியோர் தலைமையில் தஞ்சை ரயில் நிலையம் முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது அங்கு எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 1,000 பெண்கள் உட்பட 1,800 பேரை கைது செய்தனர். ஞ்சை மாவட்டத்தில் நேற்று நடந்த போராட்டத்தால்  8,856 பேர் பணிக்கு வரவில்லை. தஞ்சை மாவட்டத்தில் 16,580 அரசு பணியாளர்களும், 10,900 ஆசிரியர்கள் என்று மொத்தமாக 27,480 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் அரசு ஊழியர்கள் 3,171 பேர்  நேற்று பணிக்கு வரவில்லை.  அதேபோல் 5,685 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.  ஒட்டு மொத்தமாக பார்த்தால் மாவட்டத்தில் 27,480 பேரில் 8,856 பேர்  பணிக்கு வரவில்லை. 62 ஆசிரியர்கள் மீது வழக்கு9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த 22ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் இதுவரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 1,000 பெண்கள் உட்பட 1,800 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 62 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய, மாநில அரசை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயன்ற இந்திய ஐனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.





Tags : Zakto Giovanni ,Tanjore ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...