×

கலெக்டர் அலுவலகத்தில் காவு வாங்க காத்திருக்கும் மின்விளக்கு பெட்டி

பெரம்பலூர்,ஜன.29: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முகப்பில் மனுக்களை பதிவு செய்யும் கணினிஅறை, ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கு மிடம் இலசவ மனு எழுதித்தரும் பகுதி ஆகியன உள்ளன. இவற்றின் மையப் பகுதிக்கு வந்த பிறகுதான் 3 தளங்களிலுள்ள அந்தந்த துறை அலுவலகத்திற்கும் செல்ல வேண்டும்.இதனால் ஆட்கள் நடமாட்டம் எப்போதும் நிறைந்திருக்கும். குறிப்பாக திங்கட்கி ழமை இந்த மைய வளாகம் மனுதாரர்களால் நிரம்பியிருக்கும். இப்பகுதியில் தலைக்கு மேல் உள்ள சீலிங் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்விளக்கு வசதி செய்யப்பட் டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட ஒரு மின்விளக்கு பெட்டியின் இரும்புமூடி மட்டும் திறந்துகொண்டு கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இது எதிர்பாராதவிதமாக மனுதாரர்கள் மீதோ, அரசு அலுவலர்கள் மீதோ விழுந்தால் மண்டையை உடைத்து விபரீதமாகி விடும். அதுபோல் அசம்பாவி தங்கள் நேர்ந்து காவுவாங்கும் முன்பாக அவற்றை கலெக்டர் அலுவலக பரா மரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் மேலாளர் நிலையிலுள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் கவனித்து விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுதாரர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரியுள்ளனர்.

Tags : waiter ,collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...