×

குளித்தலை கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.25லட்சம் நிதி ஒதுக்கீடு

குளித்தலை, ஜன.29: கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகரில் 1995 டிசம்பரில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் கிளை நூலகம் தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல் பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு 1984ம் ஆண்டு முன்னாள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கருப்பையா சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கிளை நூலகத் திற்கு சொந்த கட்டிடம் அமைக்கப்பட்டு 35ஆண்டுகளாகிறது. இந்த நூலகத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புற மாணவர்கள், முதியவர்கள், பெண் கள், குழந்தைகள் என தினந்தோறும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து செல்வ தால் இட நெருக்கடி ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலை குறித்து குளித்தலை வாசகர் வட்டம் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் கூட்டமைப்பு சார்பில் ராஜ்யசபா எம்பி டி.கே.ரெங்கராஜனிடம் குளித்த லை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என கோரி க்கை மனு அளித்திருந்தனர்.
கோரிக்கையை ஏற்ற ராஜ்ய சபை எம்பி டி.கே ரெங்கராஜன் ரூ.25லட்சம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். குளித்தலை கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ரூ.25லட்சம் நிதி ஒதுக்கிய ராஜ்யசபை எம்பி டி.கே.ரெங்கராஜனுக்கு நன்றி தெரி விக்கும் வகையில் கிளை நூலகம் முன்பு  குளித்தலை வாசகர் வட்டம் மற்றும் மாணவர்கள், இளை ஞர்கள், பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் நூலக வாச கர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றியை தெரிவித்து கொண்டனர்.



Tags : building ,library ,Bathinda Library ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி