பள்ளி ஆண்டு விழா

மதுராந்தகம், ஜன.29: அச்சிறுப்பாக்கம் அடுத்த விளாங்காடு கிராமத்தில் அமைந்துள்ளது டாக்டர் ஜேக்கப்ஸ் ஹைடெக் பள்ளி. இப்பள்ளியின் எட்டாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளி  தாளாளர் நிம்மி விட்டோ தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளியின் சேர்மன் டாக்டர் விட்டோ அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் ஹசீனா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் அரிமா சங்க மாவட்ட  ஆளுநர் ராமமூர்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டன.

× RELATED பால்குட திருவிழா