×

லாரி மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு

சோளிங்கர், ஜன.29: சோளிங்கர் அருகே லாரி மோதி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.சோளிங்கர் அடுத்த கீழண்டை மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(70), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இந்நிலையில் இவர் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக சைக்கிளில் சோளிங்கர் சென்றார். கிழக்கு பஜார் தெரு பிள்ளையார் கோயில் அருகே சென்றபோது திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக வெங்கடேசன் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதியது.இதில் நிலைதடுமாறி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Larry Kitty ,
× RELATED மதுபாட்டில் ஏற்றி சென்ற லாரி மோதி விவசாயி சாவு