சார்பதிவாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

நாமக்கல், ஜன.25: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த, கணக்கில் வராத ₹17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த அனைத்து அலுவலர்களிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர். இதுதொடர்பாக, சார்பதிவாளர்(பொ) சுகம், அலுவலக உதவியாளர் சந்திரமோகன் ஆகிய இருவர் மீதும் போலீசார் லஞ்சஒழிப்பு தடுப்பு தடை சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : persons ,defendant ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...