×

விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த பயிற்சி, வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான விருது

சேலம், ஜன.25: விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு “சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான விருது” வழங்கப்பட்டது.“இந்திய கல்வி நெட்வொர்க்” (IEN) என்பது உலக அளவில் கல்வி தொடர்பான சிக்கல்களை பகுப்பாய்ந்து, அவற்றுக்கான சிறந்த வழிமுறைகளை வகுத்து தரும் ஓர் முன்னணி சமூகமாகும். தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் உள்ள கல்வி சவால்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவும் கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கவுரவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். “இந்திய கல்வி நெட்வொர்க்கின்” 7வது உயர் கல்வியியல் மாநாடு, நடப்பாண்டு டெல்லியில் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இம்மாநாட்டில் விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு “சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான விருது” வழங்கப்பட்டது. மேலும் துறையின் டீன் டாக்டர்செந்தில்குமாருக்கு மாணவர்களுக்கான சிறந்த ஆலோசகர் என்ற விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதுகளை துறையின் டீன் சார்பாக, மூத்த விரிவுரையாளர் டாக்டர் பார்த்தீபன் பெற்றுக்கொண்டார்.

Tags : Ally Health Science Sector ,
× RELATED தனியார் ஊழியரிடம் ₹3.23 லட்சம் மோசடி