×

பீடி அதிபருக்கு கொலை மிரட்டல் 2 பேர் கைது

சிவகாசி. ஜன. 25: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் அப்துல்அசின் (37) அந்த பகுதியில் பீடி உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது பீடியின் லேபிள்கள் சிவகாசி தெய்வானை நகரில் உள்ள தனியார் அச்சகத்தில் போலியாக அச்சடிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. எனவே அங்கு வந்து விசாரித்தார். அப்போது அச்சகத்தில் இருந்த ஜாபர்உசேன் (54) சுனைச்செல்வம் (44) ஆகியோர் அப்துல்அசினுக்ு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags : chieftain ,
× RELATED காலபைரவரை முறைப்படி இப்படித்தான் வணங்க வேண்டும்