திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அர்ச்சகர்களுக்கு புத்தொளிப் பயிற்சி

திருவில்லிபுத்தூர், ஜன. 25: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அர்ச்சகர்களுக்கு புத்தொளிப்பயிற்சி துவங்கியது.திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் அர்ச்சகர்களுக்கு புத்தொளிப் பயிற்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு புத்தொளிப் பயிற்சி துவங்கி உள்ளது. இதன் துவக்க விழா ஆண்டாள் கோயில் வளாகத்தில் ராபத்து மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சியை துவக்கி ைவத்து நிர்வாக அதிகாரி இளங்கோவன் பேசினார். இதில் வேத பிரான் பட்டர் அனந்தராமகிருஷ்ணன் ஆண்டாள் கோயில் ஆய்வாளர் பாண்டியன் பாலாஜி பட்டர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஆண்டாள் கோயில் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, ‘இந்த பயிற்சி முகாம் 48 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் அர்ச்சகர்கள் மற்றும் பாரிஜதர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். பயிற்சியை வேதபிரான்பட்டர் சுதர்சனன் மற்றும் ஆண்டாள் கோயில் அர்ச்சகர் பாலாஜி ஆகியோர் வழங்குகின்றனர்’ என்றார். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories:

>