கந்தூரி விழாவில்சந்தன குடம் ஊர்வலம்

கீழக்கரை, ஜன.25: கீழக்கரையில் நடந்த கந்தூரி விழாவில் நேற்று சந்தனம் பூசும் விழா நடைபெற்றது, இதில் ஜாதி மதபேதமில்லாமல் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844ம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி கொடி ஏற்றப்பட்டது. இரவில் மவுலீது (புகழ்பாடி) ஓதப்பட்டதை தொடர்ந்து இரவு 12 மணியளவில் காட்டு பள்ளியில் இருந்து கரைத்த சந்தனத்தை வெள்ளி குடத்தில் வைத்து தர்ஹா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வந்து மகானின் மக்பிராவில் (சமாதியில்) சந்தனம் பூசப்பட்டது.

இதை தொடர்ந்து வரும் 4ம் தேதி மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களுக்கு நெய் சோறு வழங்கப்படுகிறது. முன்னதாக உலக மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதிக்காக மாவட்ட அரசு காஜி சலாஹீதீன் ஆலிம் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

× RELATED 4 மாதத்தில் இருந்து 39 நாளாக குறைந்த தேர்தல் திருவிழா