×

பட்டிவீரன்பட்டி அருகே அறிவிப்பின்றி நிழற்குடை திடீர் அகற்றம் பயணிகள் கடும் அவதி

பட்டிவீரன்பட்டி, ஜன. 25:  பட்டிவீரன்பட்டி அருகே சாலை விரிவாக்கத்திற்காக நிழற்குடை இடிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பட்டிவீரன்பட்டி அருகே ‘அ’ பிரிவு என்ற இடத்தில் கல்லூரி மற்றும் தனியார் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. மேலும் திண்டுக்கல்லில் இருந்து வரும் பஸ் பயணிகள் இந்த ‘அ’ பிரிவில் இறங்கிதான் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இந்த இடத்தில் நிழற்குடை இல்லாமல் இருந்ததால் மாணவ மாணவிகள், பயணிகள் வெயிலும், மழையிலும் அவதியடைந்து வந்தனர்.

இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1 வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ‘அ’ பிரிவிலிருந்து பட்டிவீரன்பட்டி வரை வத்தலக்குண்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக இந்த நிழற்குடையை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள், பயணிகள் மீண்டும் அவதியடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் போதுமான அளவில் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மீண்டும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.2 பேர் மீது வழக்கு
முன்னறிவிப்பின்றி நிழற்குடை இடித்தது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன் பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் உசிலம்பட்டியை சேர்ந்த சதீஷ், சசி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Passengers ,Pattiveeranppatti ,
× RELATED கோவையில் சாலை பள்ளத்தில் சிக்கிய அரசுப்பேருந்து