×

சின்னாளபட்டி அருகே வாகனம் மோதி பெண் கடமான் பலி

செம்பட்டி, ஜன. 25: சின்னாளபட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற பெண் கடமான் வாகனம் மோதி பலியானது. சிறுமலை வனப்பகுதியில் புள்ளிமான், கடமான், காட்டெருமை, நரி, ஓநாய் போன்ற விலங்ககுகள் உள்ளன. மாவட்டத்தில் சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் வனப்பகுதி வறட்சியுடன் காணப்படுகிறது. வனத்துறையினரும் பெயரளவில் தண்ணீர் தொட்டி ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதனால் வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வருகின்றன. இவ்வாறு வரும் விலங்குகள் மின்வேலி, விஷம் கலந்த உணவு போன்றவற்றால் கொல்லப்படுகின்றன. மேலும் வாகன விபத்துகளிலும் இரையாகின்றன.

நேற்று திண்டுக்கல்- மதுரை நான்குவழிச்சாலையில் சின்னாளபட்டி அடுத்த காந்திகிராமம் அருகே ஒரு மான் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மானின் உடலை ஆய்வு செய்ததில் இறந்தது 3 வயது பெண் கடமான் என்பதும், நள்ளிரவில் ரோட்டை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருக்கலாம் என்பது தெரிந்தது. தொடர்ந்து வனத்துறையினர் மானின் உடலை புதைக்க எடுத்து சென்றனர்.

Tags : Chinnalapatty ,
× RELATED சின்னாளபட்டி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்