×

ஜாக்டோ ஜியோ போராட்டம் நாகை மாவட்டத்தில் 1500 பேர் கைது

நாகை. ஜன.25:நாகை மாவட்டத்தில் 3ம் நாளாக நடந்த முற்றுகை போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 1500 பேர் கைது
செய்யப்பட்டனர்.ஜாக்டோ ஜியோ சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், சத்துணவு ஊட்டச்சத்து ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் மாவட்ட, வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், அந்துவன்சேரல், மணிமாறன், காந்தி, ரவி, சரவணன், நாகராஜ், செந்தில்குமார், புகழேந்தி, ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து நாகை - நாகூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர். சாலை மறியல் செய்த 550 பெண்கள் உள்ளிட்ட 1200 பேரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன் மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மயிலாடுதுறை டிஎஸ்பி அழகர்சாமி  தலைமையில் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து மாலையில் விடுவித்தனர்.








Tags : district ,Naga ,
× RELATED முட்டை விற்பனை ஜோர்