×

கரூர் ஆட்சிமங்கலம் அருகே bசாலை பிரிவு வளைவு பாதையில் பேரிகாடு வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கரூர்,ஜன.25: கரூர்  ராயனுார் பகுதியில் இருந்து ஈசநத்தம், திண்டுக்கல், கோடங்கிப்பட்டி போன்ற  பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ஆட்சிமங்கலம் பகுதி உள்ளது. இந்த பகுதியில்  தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், கரூர் தாந்தோணிமலை போன்ற  பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள் சென்று  வருகிறது. இந்நிலையில், ஆட்சிமங்கலம் அருகே ஆபத்தான வளைவு பாதை உள்ளது.  அவ்வப் போது இந்த இடத்தில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த  விபத்தினை குறைக்கும் வகையிலும், வாகனங்களின் வேகத்தை கட்டுப் படுத்தும்  வகையில் பேரிகார்டு வைக்க அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






Tags : motorists ,Garry ,Karur ,road ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்