×

குமந்தாபுரம் ஊரின் மையப்பகுதியில் உரக்கிடங்கு அமைப்பதை கண்டித்து மக்கள் தர்ணா

கடையநல்லூர், ஜன. 25:  கடையநல்லூர் குமந்தாபுரத்தில் ஊரின் மையப்பகுதியில் உரக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டையநல்லூர் நகராட்சி 1வது வார்டிற்குட்பட்டது குமந்தாபுரம். இங்கு மொத்தம் 5 தெருக்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரின் மையப்பகுதியில் கோயில் மற்றும் ஆதிதிராவிடர் காலனி பகுதியும் உள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் நகராட்சி சார்பில் பொதுநிதியின் கீழ் உரக்கிடங்கு அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு 50 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. இந்தப் பகுதியில் உரக்கிடங்கு அமைந்தால் மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் தாக்கம் இருக்கும் என்பதால் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதி மக்கள் ஊரின் நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து தாசில்தார் தங்கராஜ், நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் சமரசத்தையேற்று போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.






Tags : Darna ,center ,town ,Kumantapuram ,
× RELATED காதல் கணவரின் குடும்பத்தினர்...