அம்பை காவல் நிலையத்தில் பிரம்மதேசம் கோயில் திருவிழா ஆலோசனை

அம்பை, ஜன. 25:  அம்பை காவல் நிலையத்தில் பிரம்மதேசம் கோயில் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அம்பை அருகே உள்ள பிரம்மதேசத்தில், பிரசித்திப் பெற்ற நாலாயிரத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜன.28ம் தேதி தொடங்கி ஜன.30ம் தேதி வரை கோயில் கொடை விழா நடைபெறுகிறது. இதையடுத்து விழாவை அமைதியாக நடத்துவது தொடர்பாக அனைத்து சமுதாய பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், அம்பை காவல் நிலையத்தில் நடந்தது. டிஎஸ்பி ஜாகீர்உசேன் தலைமை வகித்தார்.இதில், விழா காலங்களில் சாதி, மதம் மற்றும் அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட பேனர்கள் வைக்கக் கூடாது. சாதி சமுதாய பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது. கொடிகளை பயன்படுத்தக் கூடாது.  காலை 6 மணி முதல் கூம்பு வடிவ குழாய் பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் தரப்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சூரப்பன், ஜெயந்தி, பிரம்மதேசம் பகுதி சமுதாய நிர்வாகிகள், எஸ்ஐ செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED வருசநாட்டில் வேணி அம்மன் கோயில் திருவிழா