பைக் விபத்தில் வாலிபர் பலி

ஏர்வாடி, ஜன. 25: ஏர்வாடி அருகே செங்கலாகுறிச்சி கீழுரை சேர்ந்தவர் சந்தோஷ் (21). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலையில் தளபதிசமுத்திரம் அருகே நடந்த உறவினர் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு பைக்கில் சென்றார். பின்னர் சந்தோஷ் மற்றும் அவரது உறவினர் இதே பகுதியை சேர்ந்த ஜெனீஸ் (17) ஆகியோர் பைக்கில் ஊருக்கு புறப்பட்டனர். இளையநயினார்குளம் பகுதியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சந்தோஷ் பலத்த காயமடைந்தார். ஜெனீசுக்கு கால் முறிந்தது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் இறந்தார். தகவலறிந்த ஏர்வாடி எஸ்ஐ இம்மானுவேல் மற்றும் போலீசார், சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>