×

ராம்சுரத்குமார் தியான மண்டப வருஷாபிஷேகம்

புதுக்கோட்டை, ஜன. 25: தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டையில் உள்ள ராம்சுரத்குமார் தியான மண்டபத்தில் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி கணேஷ் சர்மா குழுவினர் சிறப்பு ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தினர். விழாவில் ஆனந்தாஸ்ரம சத்சங்க நெல்லை வெங்கடாசலபதி, துரைராஜ், விசிறி சங்கர், எட்டயபுரம் உலகநாதன், சொக்கலிங்கம் அழகானந்தம், கல்யாணசுந்தரம், பொறியாளர் நாராயணமூர்த்தி, புதுக்கோட்டை மாரியப்பன், சுந்தரராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் நெல்லை திருமலை நம்பி செய்திருந்தார்.
 .

Tags : Ramsuruthkumar ,Dhani Mandap Vasashabhishekam ,
× RELATED முள்ளக்காடு பகுதியில் மீனவரை தாக்கிய இருவர் கைது