×

மாமியாரை படுகொலை செய்த வழக்கு 8 மாதமாக தலைமறைவாக இருந்த கொத்தனார் கைது

மாமியாரை படுகொலை செய்த வழக்கில் 8 மாதமாக தலைமறைவாக இருந்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.மார்த்தாண்டம் அருகே உள்ள சுவாமியார்மடம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (29). கொத்தனார். கடந்த 2014ம் ஆண்டு நடுரோட்டில் வைத்து மாமியாரை வெட்டி படுகொலை செய்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஸ்டாலினை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஸ்டாலின் ஜாமினில் வெளியே வந்தார். அதன் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இதேபோல் குமரி மாவட்ட ஓசிஐயு தனிப்படை போலீசாரும் ஸ்டாலினை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடசேரி பஸ் நிலையத்தில் ஸ்டாலின் நின்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற ஓசிஐயு தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags : Kodanar ,murder ,
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு