×

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக நிறைவு விழா

மேட்டூர், ஜன.24:   மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் மஹாகும்பாபிஷேக 6ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில், திருப்பணிகள் நடத்தப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, ஆண்டுதோறும் கும்பாபிஷேக நிறைவு விழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை மகா கும்பாபிஷேகத்தின் 6ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி பூஜை நடந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆலய நிர்வாகம் இணைந்து செய்திருந்தன.

Tags : Kumbabishekha ,ceremony ,Bhadrakaliyamman ,
× RELATED அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு...