×

நகராட்சி நிர்வாகத்திற்கு ஆஸ்டின் எம்.எல்.ஏ கண்டனம் - வேலையிழப்பு ஏற்படுத்தியுள்ளதாக புகார்

நாகர்கோவில், ஜன.24: நாகர்கோவில் நகராட்சி நிர்வாகத்திற்கு ஆஸ்டின் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்டின் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வாரமாக நாகர்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்களை  அனுமதியை மீறி கூடுதல் கட்டிடம் கட்டியுள்ளதாக கூறி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து வருகிறது. இதனால் அங்கு பணியாற்றுவோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நகராட்சியின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. விதிகளை மீறி ஒரு கட்டிடம் கட்டப்பட்டால், அதனை கட்டும்போதே தடுக்க வேண்டிய பொறுப்பு நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளது. இதனையும் மீறி கட்டி முடித்தால்,  நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தை அளந்து வரி விதிக்கின்றனர். எனவே அந்த நேரத்திலாவது கட்டிடத்தை திறக்காமல் நடவடிக்கை எடுத்திருக்கலாம். தற்போதைய நடவடிக்கையால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதற்கு கலெக்டரும், நகராட்சி ஆணையரும் பதில் கூறியே ஆக வேண்டும். விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டு இருந்தாலும் பல ஆண்டுகள் வியாபாரம் நடைபெற்றுள்ளது. எனவே அவற்றுக்கு விதிவிலக்கு வழங்கி  மீண்டும் அந்த கடைகளை  தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இதனால் இங்கு பணியாற்றியவர்களுக்கு மீண்டும் ேவலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே இந்த கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்த, ஆரம்ப நிைலயில் கண்டு கொள்ளாத சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Austin MLA ,administration ,
× RELATED கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு...