×

திருமக்கோட்டை அருகே தென்பரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

மன்னார்குடி, ஜன. 24: கோட்டூர் ஒன்றியம் தென்பரை கிராமத்தை சேர்ந்தவர்  கிருஷ்ணமாச்சாரியார். இவர் இந்திராகாந்தி,  வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்த போது மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக பணியா ற்றி பின்னர் இந்திய அரசின் சார்பில் ஐநா சபையில் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் தென்பரை அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ 4 லட்சம், தொடக்கப் பள்ளிக்கு ரூ 2 லட்சம், தெற்கு தென்பரை அரசு துவக்க பள்ளிக்கு ரூ 1 லட்சம், தென்பரை மேலக்காடு அரசு துவக்க பள்ளிக்கு ரூ 1 லட்சம் என மொத்தம் ரூ 8 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அதிலிருந்து ஆண்டு தோறும் வட்டியாக கிடைக்கும் ரூ 60 ஆயிரத்தை மேற்கண்ட 4 அரசு  பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களில்  அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி ஊக்க தொகை வழங்க வும், பள்ளிகளில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்க தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி  இந்த ஆண்டு மேற்கண்ட 4 அரசு பள்ளி  மாணவ மாணவி யர்களுக்கு  கல்வி  ஊக்க தொகை வழங்கும் விழா நேற்று தென்பரை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. விழா விற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர் தேவகி ஆவணி, தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ், இருளப்பன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கிருஷ்ணமாச்சாரியார் 4 அரசு பள்ளிகளில்  தேர்வு, விளையாட்டு, கலை, அறிவியல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்க தொகை மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.விழாவில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சுப்பிரமணியன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணதாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக உதவி தலைமையாசிரியர் தேவசேனா வரவேற்றார். முடிவில் தலைமையாசிரியை ரோஸ்லின் ஜெயராணி நன்றி கூறினார்.

Tags : government school students ,Tirumakottai ,Tirunelveli ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு